தமிழ்நாடு

tamil nadu

ராமர் கோயில் கட்ட ஒரே மாதத்தில் பல கோடி நன்கொடை வசூல்: எவ்வளவு தொகை தெரியுமா?

By

Published : Jun 30, 2022, 10:15 PM IST

அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயில் கட்ட பொதுமக்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு மாத கால கட்டத்தில் மட்டும் ரூ.3,400 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ராமர் கோயில்
ராமர் கோயில்

உத்தரப்பிரதேசம் (அயோத்தி):உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராம ஜென்மபூமி கோயில் கட்ட பொதுமக்களிடமிருந்து நன்கொடை பெறப்படுகிறது. இந்தநிலையில் இந்தாண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான கால கட்டத்தில் மட்டும் ரூ.3,400 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக கோயில் அறக்கட்டளை இன்று(ஜூன் 30) தெரிவித்துள்ளது.

மகர சங்கராந்தி (ஜனவரி 15) முதல் சந்த் ரவிதாஸ் ஜெயந்தி (பிப்ரவரி 16) வரை சுமார் 11 கோடி மக்களிடமிருந்து ரூ.3,400 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்று ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அலுவலர் பிரகாஷ் குப்தா தெரிவித்தார்.

மேலும் பிரகாஷ் குப்தா கூறுகையில், "குறைந்தபட்சத் தொகையாக ரூ.10 முதல் கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்கப்படுகிறது. தொகை சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அனைவருக்கும் இதில் பங்கு இருக்கும். ஊழியர் மக்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று நன்கொடை பெறுகின்றனர். 2024 ஜனவரிக்குள் கோயிலின் கருவறை பணிகள் முடிவடைந்து தயாராகிவிடும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவுசெய்வதில் தாமதம் கூடாது!

ABOUT THE AUTHOR

...view details