தமிழ்நாடு

tamil nadu

ராமர் கோயில் நில விவகாரத்தில் நடந்தது என்ன?

By

Published : Jun 15, 2021, 11:00 PM IST

ராமர் கோயில் நில விவகாரத்தில் நடந்தது என்ன என்பது குறித்து ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் விளக்கம் அளித்தார்.

Ram Temple
Ram Temple

அயோத்தி: ராமர் கோயில் நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கூறிய மோசடி குற்றச்சாட்டை சம்பத் ராய் நிராகரித்தார். இது குறித்து 'ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா' பொதுச் செயலாளர் சம்பத் ராய் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அளித்துள்ள விளக்கத்தில், “இந்தக் குற்றஞ்சாட்டுகள் வெறுப்பால் வந்தவை” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “இந்தக் குற்றச்சாட்டுகள் தவறானவை. இதனை மக்கள் நம்ப வேண்டாம். திட்டமிட்டப்படி கோயில் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.

இந்த நிலத்தின் மதிப்பு சந்தை மதிப்பை விட குறைவு. ஒரு சதுர அடி ரூ.1,423 ஆகும். இந்த நிலம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் உள்ளன. ஆனால் இதெல்லாம் பல்வேறு காரணங்களால் நிறைவேறவில்லை.

இந்த நிலத்தை வாங்குவதில் நியாஸ் என்பவர் ஆர்வமாக இருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஒப்பந்தத்தில் சுமார் 9 நபர்கள் ஈடுபட்டுள்ளனர், இந்த 9 நபர்களில் 3 பேர் முஸ்லிம்கள்.

அனைத்து நபர்களும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டனர். அவர்களின் சம்மதத்தைப் பெற்றதும், அவர்கள் அனைவரும் வந்து தங்கள் முந்தைய ஒப்பந்தங்களைத் தீர்மானிக்க ஒன்றாக அமர்ந்தனர்.

முந்தைய ஒப்பந்தங்கள் எப்போது முடிவடைந்தன, எப்போது வேண்டுமானாலும் இழக்காமல் உடனடி நடைமுறைக்கு நிலத்தின் இறுதி உரிமையாளர்களுடன் அறக்கட்டளை ஒப்பந்தம் செய்தது.

இது விரைவாகவும் அதேநேரத்தில் வெளிப்படையான முறையிலும் செய்யப்பட்டது. அறக்கட்டளையின் உறுதியான முடிவு என்னவென்றால், அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமாகவே இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் நிலம் தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் அவர் வெளியிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details