ஹைதராபாத்:தெலுங்கு சினிமாவில் மிகப்பெரும் ஹிட்டான ரங்கஸ்தளம் படத்தை இயக்கிய புச்சி பாபு சனா, ராம் சரண் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரங்கஸ்தளம் படத்தில் ஏற்கனவே ராம் சரண் நடித்து இருந்த நிலையில் புச்சி பாபு சனா இயக்கத்தில் மீண்டும் அவர் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.
இந்நிலையில் இருவர் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மிக எதிர்பார்ப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் ராம் சரணுடன், நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடம் மேலும் ஆவலை அதிகப்படுத்தி உள்ளது. விஜய் சேதுபதி ஏற்கனவே இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் பேட்ட, கமல்ஹாசனுடன் விக்ரம், விஜய்யுடன் மாஸ்டர், ஷாருக்கானுடன் ஜவான் ஆகிய திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: எங்களுக்கு பிரேக்கப்பா?.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து உண்மை உடைத்த அமீர் - பாவ்னி!