டெல்லி: மாநிலங்களவை பட்ஜெட் இரண்டாம் கட்டத் கூட்டத்தொடர் கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இன்று தொடங்கியது.
இதையடுத்து, மாநிலங்களவையில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி துமளியில் ஈடுபட்டன. இந்நிலையில் மாநிலங்களவை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.