தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அண்ணன் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்; பெங்களூரு வந்தடைந்தார் ரஜினிகாந்த்! - ரஜினிகாந்த்

டிசம்பர் 12ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றார்.

Rajinikanth reached Bengaluru  Rajinikanth  Bengaluru  டிசம்பர் 12  ரஜினிகாந்த்  பெங்களூரு
Rajinikanth reached Bengaluru Rajinikanth Bengaluru டிசம்பர் 12 ரஜினிகாந்த் பெங்களூரு

By

Published : Dec 7, 2020, 2:00 AM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைபாடு குறித்து தெளிவுப்படுத்தினார்.

அதன்படி, டிசம்பர் 31ஆம் தேதி கட்சித் தொடர்பான அறிவிப்பும், ஜனவரியில் கட்சியும் தொடங்கப்பட உள்ளது.

இதனால் தனது பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் தனது ரசிகர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது காரில் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சாலை மார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை (டிச6) புறப்பட்டு சென்றார்.

தற்போது அவர் பெங்களூரு சென்றடைந்துள்ளார். தனது அண்ணன் வீட்டில் மாடியிலிருந்து ரஜினிகாந்த் கையசைப்பதும், அதற்கு ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதும் போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:'பிறந்த நாளன்று வீட்டுக்கு வர வேண்டாம்'- ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details