நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ் குமார், மோகன்லால், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பலர் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தனர். முன்னதாக ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் விஜய்யை தாக்கி பேசியதாக சமூகவலைதளங்களில் நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது முதல் மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இரண்டு காட்சிகளில் சிவராஜ் குமார் தோன்றினாலும் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
இன்று வரை ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ஹெச்டி ப்ரிண்ட் (HD Print) இளையதளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் வெளியாவதற்கு முன்பாகவே ஜெயிலர் படத்தின் ப்ரிண்ட் இணையதளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்தின் லிங்கை பகிர வேண்டாம் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.