டெல்லி:நாடு முழுவதும் தற்போது இயல்பை விட சூரிய வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். பிற்பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வருகிறது.
இந்நிலையில், வெப்பநிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.