தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த போலீஸ் அதிகாரி - கட்டிலில் கட்டி புரட்டிய பொதுமக்கள்! - ராஜஸ்தான் செய்திகள்

ராஜஸ்தான் மாநிலத்தில் அத்துமீறி பெண்ணின் வீட்டினுள் நுழைந்து அவரை பாலியல் வன்புணர்வு செய்த போலீஸ் அதிகாரியை அக்கம்பக்கத்தினர் கட்டிலில் கட்டி வைத்து அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 18, 2023, 5:01 PM IST

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் தவ்சா மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பாஸ்வா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி தன்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டதாக பாஸ்வா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் “பாஸ்வா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி மகேஷ் குமார் குர்ஜார், கடந்த செவ்வாய் அன்று வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார்” என தெரிவித்து உள்ளார்.

இந்த புகாரின் பேரில் பாஸ்வா காவல் நிலையத்தின் உயரதிகாரியும், பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த புகார் குறித்து வட்டார காவல் அலுவலர் பண்டிகுய் ஈஸ்வர் சிங் கூறுகையில், “கான்ஸ்டபிள் மகேஷ் குமார் குர்ஜார் தவ்சா மாவட்டத்தில் 30 வயது பெண்ணின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அப்பெண் கத்தி கூச்சலிட்டபோது அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்துள்ளனர்.

அப்போது அப்பெண்ணின் குடும்பத்தாரும் சுதாரித்து குற்றம் செய்தவரை பிடித்துள்ளனர். பின்னர், அந்த போலீஸ் கான்ஸ்டபிளை கட்டிலில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாஸ்வா காவல் நிலையத்தைச் சேர்ந்த மற்ற போலீஸ் அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்ட குர்ஜார் என்ற அதிகாரியை கையும் களவுமாகப் பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். ஆனால், குர்ஜாரை மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு விசாரணை நடத்தாமல் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்” என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பாஸ்வா காவல் நிலைய அதிகாரி தகவல் தெரிவிக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட குர்ஜார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மற்றொரு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓடும் ரயிலின் கழிவறையில் சிறுமியின் கால் சிக்கியதால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details