தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆணையரிடம் அத்துமீறிய மேயர், பாஜக நிர்வாகிகள் - அதிரடி காட்டிய ராஜஸ்தான் அரசு

ஜெய்பூர்: மாநகராட்சி ஆணையரிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஜெய்பூர் மேயர், மூன்று பாஜக கவுன்சிலர்களை ராஜஸ்தான் அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Rajasthan
ராஜஸ்தான் அரசு

By

Published : Jun 7, 2021, 8:25 AM IST

ஜெய்பூர் மாநகராட்சி ஆணையர் யாக்ய மித்ரா சிங் தியோவிடம், தவறாக நடந்துகொண்ட ஜெய்பூர் மேயர், மூன்று பாஜக கவுன்சிலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்திட காங்கிரஸ் அரசு முடிவுசெய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 4), ஜெய்பூர் மேயர் அலுவலகத்திற்கு வீடு வீடாகக் குப்பை அள்ளும் திட்டம் தொடர்பாக விவாதிக்க மாநகராட்சி ஆணையர் யாக்ய மித்ரா சிங் தியோ சென்றுள்ளார். அப்போது, மேயருக்கு ஆணையரிடம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், அங்கிருந்து ஆணையரும், அரசு ஊழியரும் வெளியேற முயன்றனர். ஆனால், அவர்களைத் தடுத்து நிறுத்தி தவறான வார்த்தையில் மேயரும், மூன்று கவுன்சிலர்களும் பேசியுள்ளனர்.

இது குறித்து ஆணையர் அளித்த புகாரின்பேரில், மேயர் உள்பட நால்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details