ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தனது மனைவி சுனிதாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாகத் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு கரோனா: தனிமைப்படுத்திக்கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர் - ராஜஸ்தான் முதலமைச்சர்
ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர்
அதில், “எனது மனைவி சுனிதாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டிலிருந்தபடியே அரசுப் பணியைச் செய்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.