தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ராஜஸ்தான் முதலமைச்சர்! - ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று (மார்ச்.5) அரசு மருத்துவமனை ஒன்றில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

Rajasthan CM Gehlot
Rajasthan CM Gehlot

By

Published : Mar 5, 2021, 3:43 PM IST

இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. அதில், முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மார்ச் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி, முதல்நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள் என அனைத்துத் தரப்பினரும் தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர்.

அதடிப்படையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருடன் மாநில சுகாதார அமைச்சர் ரகு ஷர்மாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:குடும்பத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்ட சரத் பவார்!

ABOUT THE AUTHOR

...view details