ஜெய்ப்பூர் :ராஜஸ்தானில் அனைத்து குடும்பங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். குறைந்த அளவில் மின் உப்யோகிக்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார சுமைகளை இந்த திட்டம் குறைக்கும் என முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார்.
பொது மக்களின் கருத்து மற்றும் பணிவீக்க விவகார நிவாரண முகாம்களின் பரிந்துரையை அடுத்து பொது மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார். மேலும் மே மாதத்திற்கான மின் கட்டணத்தில் மாற்றம் குறித்து பொது மக்கள் தெரிவித்து உள்ள கருத்துகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்த 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் மூலம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார சுமை சற்று குறையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீடுகளில் 100 யூனிட் வரை மின் உபயோகப்படுத்துபவர்கள் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டாம் என்றும், 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் முதல் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தவிர்த்து மீதமுள்ள யூனிட்டுகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அரசின் இந்த திருத்தப்பட்ட கொள்கையின் மூலம் மாதந்தோறூம் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக பெற்று நுகர்வர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடுத்தர வர்க்க மக்களை ஆதரிக்கும் வகையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் அசோக் கெலாட் அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.