டெல்லி:நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், "2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரையிலான கடந்த 8 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 204 பேருக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அளித்துள்ளது. 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டத்தில் ரயில்வே துறைதான் அதிக பங்களிப்பை அளித்துள்ளது.
இந்தாண்டில் மட்டும் 18 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 1.4 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெகு விரைவில் அவர்களுக்கு பணிகள் உறுதிசெய்யப்படும். பெரும் நிறுவனமான இந்தியன் ரயில்வே துறையில் உயிரிழப்பு, பணி ஓய்வு, பணி விலகல் ஆகியவற்றால் காலியிடங்களும் ஏற்படுகின்றன.