கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள சதர் பஜாரில் கரோனா ஊரடங்கை மீறி காய்கறி கடைகள் இயங்கி வருவதாக காவல் ஆய்வாளருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர், ஊரடங்கு விதிகளை மீறி காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறி, காய்கறி வியாபாரியை காலால் உதைத்துள்ளார்.