பெங்களூரு: சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்றும், விரைவில் கட்சியை வழிநடத்த வேண்டும் என்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்த ராமையா திங்கள்கிழமை (அக்.11) கூறினார்.
இது குறித்து முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா செய்தியாளர்களிடம் கூறுகையில், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்துள்ளேன்.
சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லை, அவரால் கடமைகளை செய்ய இயலாது. ஆகவே ராகுல் காந்தி உடனடியாக அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.