தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rahul Gandhi : நாடாளுமன்ற திறப்பை தனக்கான பட்டாபிஷேகமாக கருதுகிறார்.. ராகுல் காந்தி விமர்சனம்!

நாடாளுமன்ற திறப்பு விழாவை தனக்கான பட்டாபிஷேக விழாவாக பிரதமர் மோடி நினைத்துக் கொள்கிறார் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : May 28, 2023, 4:17 PM IST

டெல்லி : புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவை தனக்கான முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி எடுத்துக் கொள்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 20 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பு, கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்ற கட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறித்து கருத்து வெளியிட்டு உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற திறப்பு விழாவை தனக்கான பட்டாபிஷேக விழாவாக பிரதமர் நினைத்துக் கொள்வதாக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில், நாடாளுமன்றம் மக்களின் குரலாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி நாடாளுமன்ற திறப்பு விழாவை தனக்கான பட்டாபிஷேக விழாவாக கருதிக் கொள்கிறார் என்று பதிவிட்டு உள்ளார். அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் நாடாளுமன்ற திறப்பு விழா குறித்து விமர்சித்து உள்ளார்.

மிகவும் அரிதாக நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் அல்லது பங்கேற்கும் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் சர்வாதிகார போக்குகளை கொண்ட பிரதமர் மோடி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்து உள்ளார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்து உள்ளார்.

அதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்ரியா சுலே, சிவசேனா உத்தவ் தாக்ரே அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் உள்ளிட்டோரும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறித்து விமர்சித்து உள்ளனர்.

முன்னதாக நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என 19 எதிர்க்கட்சிகள் தெரிவித்து இருந்தன. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, சிவசேனா (உத்தவ் தாக்ரே அணி) உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தன.

அதேநேரம் அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஒடிசாவின் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட 13 கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டன.

இதையும் படிங்க :Rs75 Coin : ரூ.75 நாணயம், சிறப்பு தபால் தலை வெளியீடு.. அதுல அப்படி என்ன இருக்கு?

ABOUT THE AUTHOR

...view details