தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Rahul Gandhi : "ஆக்ரோஷமாக பிரசாரம் செய்யுங்கள்... காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது..." ராகுல் காந்தி! - மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும், மூத்த தலைவர்கள் ஒருங்கிணைந்து ஆக்ரோஷமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுமாறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Jul 11, 2023, 7:23 PM IST

டெல்லி : 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைவர்கள் ஆக்ரோஷமான தேர்தல் பிரசாராங்களில் ஈடுபடுமாறும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், மாநில சட்டப் பேரவை தேர்தல் என அடுத்தடுத்து இரு பெரும் தேர்தல்களை மகாராஷ்டிரா சந்திக்க உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து பேசிய மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் எச்.கே பாடீல், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை ஒன்றிணைக்க மிகப் பெரிய வாய்ப்பு உள்ளதாகவும், நாளை (ஜூலை. 12) முதலே காங்கிரஸ் தலைவர்கள் ஆக்ரோஷமான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுமாறும் ராகுல் காந்தி தெரிவித்ததாக கூறினார்.

கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நிழவும் அரசியல் நகர்வுகள் மற்றும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களுக்கான பிரசாரங்கள் குறித்தும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி மதிப்பிட்டு வருவதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளின் பொறுப்பை மூத்த தலைவர்களுக்கு வழங்குமாறு கட்சி பொறுப்பாளர்களிடம் ராகுல் கேட்டுக் கொண்டதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள கிராமங்களுக்கு சென்று பெரிய அளவில் பரப்புரைகளில் ஈடுபட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புவதாகவும் கூறினார்.

கடந்த ஆண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை மகாராஷ்டிராவில் சிறந்த முறையில் அமைந்ததாக ராகுல் காந்தி நினைவு கூர்ந்ததாக கூறிய அவர், செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய அளவிலான பாதயாத்திரைகளை நடத்துமாறு மூத்த தலைவர்களிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

அதேபோல் நவம்பர் மாதம் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளும் வகையில் கூட்டு பாதயாத்திரையை நடத்துமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக எச்.கே.பாடீல் கூறினார். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய வாய்ப்பு இருப்பதாக ராகுல் காந்தி உணர்வதாகவும், மூத்த தலைவர்கள் அதற்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்றும் வேண்டுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்களை திரட்டி அஜித் பவாரால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில், சரத் பவாருக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்ததாக அவர் கூறினார்.

காங்கிரஸ், சிவசேனா உத்தவ் அணி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் சிவசேனாவை இரண்டாக உடைத்து பின்வாசல் வழியாக பாஜக ஆட்சியை பிடித்தது போல், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பாஜக இரண்டாக உடைத்ததை மக்கள் பார்த்துக் கொண்டு இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்ததாக எச்.கே. பாடீல் கூறினார்.

இதையும் படிங்க :Chandrayaan-3 : விண்ணில் பறக்கத் தயாராகும் சந்திரயான்-3... ஒத்திகை வெற்றி.. கவுன்டவுன் எப்ப தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details