ஒன்றிய அரசு கடந்தாண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்திய நிலையில், அதற்கு எதிராக விவசாயிகள் எட்டு மாதங்களுக்கு மேலாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு சட்டத்தை திரும்பப் பெறக்கோரி அவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.
ஏழு மாத நிறைவை குறிப்பிடும் விதமாக விவசாயிகள் இன்று (ஜூன் 26) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். இந்த போராட்டத்தற்கு ஆதரவாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.