ஜாலவார் (ராஜஸ்தான்):காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.9 அன்று நாடு முழுவதுமான இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.
இப்பயணம் தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்து நேற்று (டிச.4) ராஜஸ்தானிற்குள் நுழைந்தது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலம் என்பதால் அங்கு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநில முதலமைச்சர் அசோக் கெலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா ஆகியோர் ராகுல் காந்தியை வரவேற்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மத்திய பிரதேசத்தில் 12 நாட்களாக 380 கி.மீ இந்த நடைபயணம் நேற்று (டிச.4) ராஜஸ்தானின் ஜாலவார் மாவட்டத்தை அடைந்தது. ராகுலை வரவேற்றபோது மாநில முதலமைச்சர் அசொக் கெலட், சச்சின் பைலட், கோவிந்த் சிங் ஆகியோருடன் இணைந்து ராஜஸ்தான் நாட்டுப்புற இசைக்கு கை கோர்த்து நடனமாடினர். முன்னதாக சனிக்கிழமை(நவ.3) ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அவரது டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அனைவரையும் வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பாஜகவிற்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். அசோக் கெலட்டிற்கும் ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கு இடையே பல பிரச்சனைகள் இருந்தாலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டது காங்கிரஸ் தொண்டர்களை மகிழ்வித்தது.