புது டெல்லி : காங்கிரஸ் கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி விஜய் செளக் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் தொண்டர்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
தொடர்ந்து, “கடந்த 9 நாள்களில் மட்டும் 10 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” எனக் கோஷமிட்டனர். காங்கிரஸ் கட்சியின் இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் செளத்ரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி கூறுகையில், “எங்கள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைத்து கட்டுக்குள் வைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.