தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பயணம் திடீர் ரத்து: ஆன்லைனில் பரப்புரை செய்த ராகுல் - ராகுல் காந்தி அசாம் பயணம்

அஸ்ஸாம் பயணம் மோசமான வானிலை காரணமாக ரத்தானதால் ராகுல் காந்தி ஆன்லைனில் பரப்புரை செய்தார்.

Rahul Gandhi
Rahul Gandhi

By

Published : Mar 30, 2021, 7:15 PM IST

அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் அங்குள்ள ஹஃப்லாங் பகுதியிஸ் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

அங்கு வானிலை மோசமாக இருந்ததால், ராகுலின் பயணம் தவிர்க்க முடியாமல் ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள வாக்காளர்களுக்கு காணொலி மூலம் தனது கருத்துகளைப் பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

அதில், வானிலை மோசமாக இருந்ததால் பயணம் ரத்தானது. அதற்காக வருந்துகிறேன். இருப்பினும் அஸ்ஸாம் மக்களை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்று அவர்களுக்கு அளித்துள்ள ஐந்து முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் நிச்சயம் நிறைவேற்றும். எனவே, மகாஜோட் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:அதை மட்டும் செய்யாதீங்க - தொண்டரின் காலில் விழுந்த மோடி!

ABOUT THE AUTHOR

...view details