தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கண்ணாடியை கழற்றி உண்மையை பாருங்கள் - மோடிக்கு ராகுல் அறிவுறுத்தல் - ராகுல்காந்தி ட்விட்டர்

பிரதமர் நரேந்திர மோடி தனது கண்ணாடியை கழற்றி மக்கள் படும் துயரை பார்க்க முன்வர வேண்டுமென ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கண்ணாடியை கழற்றி உண்மையை பாருங்கள் மோடிக்கு ராகுல் அறிவுறுத்தல்
கண்ணாடியை கழற்றி உண்மையை பாருங்கள் மோடிக்கு ராகுல் அறிவுறுத்தல்

By

Published : May 11, 2021, 6:29 PM IST

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகளை மத்திய அரசு மும்முரமாக செய்து வருகிறது. இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில். இந்த கட்டுமான பணிகளை கைவிட்டு அதற்கான நிதியை பெருந்தொற்றை எதிர்கொள்ள பயன்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கூறி வருகின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புனித நதிகளில் பிணங்கள் மிதக்கின்றன.

மருத்துவமனை வாயிலில் மக்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். மக்கள் தங்கள் உரிமையை இழந்து வாடுகின்றனர். பிரதமர் மோடி தனது கண்ணாடியை கழற்றி உண்மையைப் பார்க்க முன்வர வேண்டும். அவர் கண்களுக்கு புதிய நாடாளுமன்றம் மட்டும் தான் தெரிகிறது’ என விமர்சித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details