காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்தியாவில் போர்டு நிறுவனம் தனது தொழில்சாலைகளின் இயக்கத்தை நிறுத்தப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஊடக செய்தியை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட ராகுல் காந்தி, 'நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை மிக மோசமாக கையாளுகிறது. இதுதான் பாஜக அரசு கூறும் வளர்ச்சியா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, நாட்டு மக்களுக்கு வேலை நாளான திங்கள், விடுமுறை நாளான ஞாயிறு இரண்டுக்கும் வேறுபாடு இல்லை எனச் சாடியுள்ளார்.