நாட்டின் 73ஆவது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தேசிய கொடியை ஏற்றிய பின்னர், வீரதீர செயலுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். அமைதி காலத்தின் மிக உயரிய விருதான அசோக் சக்ரா விருது பயங்கரவாத மோதில் வீர மரணம் அடைந்த துணை காவல் ஆய்வாளர் பாபு ராம்முக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை குடியரசு தலைவரிடம் பாபு ராமின் மனைவி ரீனா ராணி மற்றும் அவரது மகன் மனிக் பெற்றுக்கொண்டனர்.