குஜராத்தில் உள்ள கேவாடியாவில்,80 ஆவது அகில இந்திய நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நவ. 25, 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டில், குடியரசு தலைவர் ராம்நாத் கேவிந்த், துணைக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவையின் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை மற்றும் மாநாட்டின் தலைவர் ஓம் பிர்லா, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர், வி.பி. சிவக்கொழுந்து ஈடிவி பாரத்திடம் பேசிய போது, "சட்டபேரவைத் தலைவர், துணைத் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து வந்திருக்கிறேன். சட்டத்தை நிலை நிறுத்துவதற்காக சட்டப்பேரவைத் தலைவர்களும், அதை செயல்படுத்துகின்ற அரசு அதிகாரிகளும், சட்டம் வழுவாமல் பாதுகாக்கின்ற நீதிபதி அவர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால், உண்மையான ஜனநாயகத்தைப் பேணிகாக்க முடியும்.