தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகை ராஷ்மிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புஷ்பா 2 புகைப்படம் வைரல்! - நடிகை ராஷ்மிகா உதவியாளர் சாய்

Rashmika Mandanna: நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 5:13 PM IST

ஹைதராபாத்: நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜூன் உடன் நடிக்கும் புஷ்பா 2 படப்பிடிப்பில் இணைந்தார். ஏற்கனவே புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடித்தார். இன்று ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Pushpa 2

அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஹார்ட் எமோஜியுடன் புஷ்பா 2 என ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் படப்பிடிப்பு நடைபெறும் பங்களா ஒன்று இடம்பெற்றுள்ளது. ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்து வருகிறார். முதல் பகத்தில் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

புஷ்பா முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூன் தேசிய விருது வென்றார். இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. முன்னதாக நடிகை ராஷ்மிகா ஹைதராபத்தில் தனது உதவியாளர் சாய் என்பவரின் திருமணத்தில் பங்கேற்றார்.

அந்த திருமணத்தில் மணமக்களுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கடந்த 6,7 வருடங்களாக சாய் மற்றும் அவரது குடும்பத்தாரை எனக்கு தெரியும். எனது குடும்பத்தில் ஒருவர் போன்ற சாய்க்கு 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நானும் அந்த திருமணத்தில் பங்கேற்றேன். இந்த தம்பதியை பார்க்க எனக்கு சந்தோஷமாக உள்ளது. சாய் பாபு மற்றும் அவரது துணைவியாருக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க: "ஒவ்வொரு ரசிகர் மன்றத்துக்கும் கடமைப்பட்டுள்ளேன்" - ஜவான் வெற்றியால் ஷாருக்கான் நெகிழ்ச்சி!!

ABOUT THE AUTHOR

...view details