தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கல்வி செயல்திறன் தரவரிசைப் பட்டியல் 2019-20: வெற்றிடமான முதலிடம் - top school education ranking

டெல்லி: மத்திய கல்வி அமைச்சகம், வெளியிட்டுள்ள பள்ளிக் கல்வி செயல்திறன் பட்டியலில் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்கள்  2ஆம் இடத்தைப் பிடித்துள்ளன.

Tamil Nadu ranks
கல்வி செயல்திறன்

By

Published : Jun 7, 2021, 9:47 AM IST

Updated : Jun 7, 2021, 9:56 AM IST

மத்திய கல்வி அமைச்சகம், கல்வி செயல்திறன் தரக் குறியீட்டின் சமீபத்திய புள்ளி விவரங்களுடன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வி செயல்திறன் தர குறியீட்டு கணக்கெடுப்பில், அணுகல், உள்கட்டமைப்பு, பங்கு, கற்றல் முடிவுகள் உள்ளிட்ட 70 அளவுருக்களில் மொத்தம் 1,000 புள்ளிகள் மூலம் கணக்கிடப்படுகின்றன.

இவை, பள்ளிக் கல்வி முறை அனைத்து நிலைகளிலும் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கும், ஏதேனும் இடைவெளி தென்பட்டால் அதனைச் சுட்டிக்காட்டவும் இந்தக் குறியீடு, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.

இந்நிலையில், இந்த 2019-20ஆம் ஆண்டில், பள்ளிக் கல்வியில் செயல்திறன் அடிப்படையில் ஒன்றுமுதல் 10 வரை மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

  • முதல் வரிசையில் எந்த மாநிலமும் இடம்பெறவில்லை.
  • இரண்டாமிடத்தில் 900 முதல் 950 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகிய ஐந்து மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
  • மூன்றாமிடத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

2019, 2020ஆம் ஆண்டு செயல்திறனில் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்பு, வசதிகள் பிரிவு

சுமார் 13 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 10 விழுக்காடு (15 புள்ளிகள்) வளர்ச்சியை அடைந்துள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஒடிசா 20 விழுக்காடு வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

கல்வி செயல்திறன் தரவரிசைப் பட்டியல் 2019-20

சம விகிதம் பிரிவு

அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஒடிசா ஆகிய மாநிலங்கள் 10 விழுக்காட்டிற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்துள்ளன.

ஆளுகைச் செயல்முறைப் பிரிவு

19 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10 விழுக்காடு வளர்ச்சியை (36 புள்ளிகள்) எட்டியுள்ளன. அந்தமான் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குறைந்தபட்சம் 20 விழுக்காடு வளர்ச்சியை (72 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகள்) பெற்றுள்ளன.

Last Updated : Jun 7, 2021, 9:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details