தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2022, 9:59 PM IST

ETV Bharat / bharat

பரோலில் சென்ற 2,000 கைதிகள் சிறைக்கு திரும்பவில்லை - பஞ்சாப் அரசு அதிர்ச்சி தகவல்!

போதைப்பொருள் வழக்குகளில் அவசர கால பரோலில் சென்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பவில்லை என பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

punjab
punjab

பஞ்சாப்: போதைப்பொருள் வழக்குகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், ’போதைப்பொருள் (என்டிபிஎஸ்) வழக்குகளில் அவசர கால பரோல் பெற்று வெளியே சென்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், இன்னும் சிறைக்கு திரும்பவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மேலும் 200 குற்றவாளிகள் தப்பியோடியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் அரசின் தலைமை வழக்கறிஞர் அன்மோல் ரத்தன் சித்து, "அரசின் இந்த அறிக்கை மூலம் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

கரோனா ஊரடங்கு காலத்தில் சுமார் 160 கைதிகள் பரோலில் சென்றனர். ஆனால் திரும்பவில்லை. இந்த விவகாரம் பஞ்சாப் சிறைத்துறையின் நிலை குறித்து கேள்வி எழுப்புகிறது" என்று கூறினார்.

இதையும் படிங்க:மனவுளைச்சலால் பிஎம்டபிள்யூ காரை ஆற்றில் தள்ளிய நபர்

For All Latest Updates

TAGGED:

Chandigarh

ABOUT THE AUTHOR

...view details