பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் லீலா பவன் செளவுக் பகுதியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். காரின் ஜன்னலில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது மட்டுமின்றி பாடலை சத்தமாக கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அந்த கார் ஓட்டுநரிடம் காவலர் விசாரித்துக் கொண்டிருக்க, அவருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், அவர் மீது காரை ஏற்றி இடித்து தள்ளிவிட்டு ஓட்டுநர் தப்பித்துச் சென்றுள்ளார். இதில், காவலருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காவலர் மீது காரை ஏற்றி இழுத்து சென்ற கொடூரம் இந்நிலையில், காவலரை இடித்த குற்றவாளியைகண்டுபிடித்த காவல் துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவலரை காருடன் சிறிது தூரம் இழுத்து சென்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க:தில்லுமுல்லு ஸ்டைலில் மோசடி... இரட்டை வேட நாயகனுக்கு போலீஸ் வலைவீச்சு