தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பற்றி எரியும் பஞ்சாப்: தீர்வு எட்டப்படுமா? - பஞ்சாப்

சண்டிகர்: வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதனைத் தீர்க்கும் வகையில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் எம்பிக்கள்
காங்கிரஸ் எம்பிக்கள்

By

Published : Nov 3, 2020, 12:49 AM IST

விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய அரசு நிறைவேற்றியது.


இந்தச் சட்டத்திற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிரோமணி அகாலி தள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன. குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.


இந்நிலையில், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜித் சிங் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் மக்களவை உறுப்பினர்கள் மனிஷ் திவாரி, அமர் சிங், முகமது சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதனைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல் ஆகியோரை அவர்கள் சந்திக்க உள்ளனர். முன்னதாக, அந்தந்தத் துறைசார்ந்த அமைச்சர்களை சந்தித்து விவசாயிகளின் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தேர் சிங் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அமரிந்தேர் சிங் சந்தித்து விவசாயிகள் பிரச்னை குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details