சண்டிகர்:கேங்க்ஸ்டர் முக்தியார் அன்சாரி வழக்கில், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் சிறைத்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ஆகியோருக்கு, முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. அன்சாரியை பஞ்சாப் சிறையில் அடைத்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, அரசு கருவூலத்தில் இருந்து 55 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்திய விவகாரத்தில், இந்த அரசு கடுமையான முடிவை எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இன்று (ஜூலை 02ஆம் தேதி) வெளியிட்டு உள்ள ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, 'அரசு கருவூலத்தில் இருந்து செலவழித்த பணத்தை மீட்டுத் தருமாறு முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் மற்றும் முன்னாள் சிறைத்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பணம் செலுத்தாத பட்சத்தில் இரு தலைவர்களின் ஓய்வூதியம் மற்றும் இதர அரசு சலுகைகள் ரத்து செய்யப்படும்’ என்று அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
வாய்ச்சவடால் அரசு - பாரதிய ஜனதா கட்சி தாக்கு:முக்தார் அன்சாரி வழக்கு விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் வெளியிட்ட அறிக்கை குறித்து, கருத்து தெரிவித்து உள்ள பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ராஜ்குமார் வெர்கா கூறியதாவது, 'இந்த அரசு, வெறும் வாய்ச்சவடால் அரசாகவே உள்ளது. செயல்பாட்டில் ஒருபோதும் ஈடுபடுவது இல்லை.