தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப் முதலமைச்சருக்கு நாளை இரண்டாவது திருமணம்! - nirmal singh nimma

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் நாளை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.

பஞ்சாப் முதலமைச்சருக்கு நாளை இரண்டாவது திருமணம்!
பஞ்சாப் முதலமைச்சருக்கு நாளை இரண்டாவது திருமணம்!

By

Published : Jul 6, 2022, 8:36 PM IST

சண்டிகர் (பஞ்சாப்): பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் டாக்டர் குர்ப்ரீத் கவுர் என்பவரை நாளை (ஜூலை 7) இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இந்நிகழ்வு முதலமைச்சரின் இல்லத்தில் எளிமையான முறையில் நடைபெறவுள்ளது. மேலும் மன் சண்டிகரில் உள்ள செக்டார் 8 இல் நடைபெறவுள்ள ஆனந்த் கர்ஜ்ஜில் (சீக்கிய முறைப்படி திருமணம்), ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் பஞ்சாப் மாநில அரசியல் பிரமுகர்களின் வரிசையில், முதலமைச்சர் பகவந்த மான் முதல் இடத்தில் இல்லை. ஏனென்றால், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிர்மல் சிங் நிம்மா, தனது 70-வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர் லூதியானாவைச் சேர்ந்த 32 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மேலும் இதுபோன்று பல அரசியல் பிரமுகர்களும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மத்திய அமைச்சர்கள் இருவர் ராஜினாமா - காரணம்?

ABOUT THE AUTHOR

...view details