தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குழந்தை பெறுவதற்காக அஸ்தியை சாப்பிடச்சொல்லி வற்புறுத்தல் - புனேவில் அதிர்ச்சி சம்பவம்! - புனேவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

புனேவில் குழந்தை பெறுவதற்காக அஸ்தியை சாப்பிடச் சொல்லி பெண்மணியை வற்புறுத்திய கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

woman
woman

By

Published : Jan 20, 2023, 8:34 PM IST

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 28 வயது பெண்மணியை, அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு சுமார் மூன்று ஆண்டுகளாக கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காததால் இந்த கொடுமைகள் மேலும் அதிகரித்துள்ளன. அப்பெண்ணை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளனர்.

குழந்தை பெற வேண்டும் என்பதற்காக அகோரி பூஜைகள், பில்லி சூனியம் உள்ளிட்டவற்றை செய்ய வைத்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு மற்றும் கோழிகளை பலி கொடுத்து பூஜை செய்ய வைத்துள்ளனர். பூஜை முடியும் வேளையில் மனித அஸ்தியை சாப்பிடச்சொல்லி வற்புறுத்தியுள்ளனர். அஸ்தியை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்றும், செல்வங்கள் பெருகும் என்றும் கூறியுள்ளனர். அதை மறுத்த பெண்மணி, இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் கணவர் ஜெயேஷ் போக்லே, மாமனார், மாமியார் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அறிக்கை அளிக்கவும் காவல் துறைக்கு மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நடனமாட மறுத்ததாக சிறுமியை தீ வைத்து கொல்ல முயற்சி .. பீகாரில் கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details