தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்களை அலைக்கழிக்க வேண்டாம்' தமிழிசை சௌந்தரராஜன்! - Today news

ரெம்டெசிவிர் மருந்துக்காக எல்லா மக்களையும் அலைக்கழிக்க வேண்டாம் என்றும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் அறிவுரையை ஏற்று செயல்பட வேண்டும் என, மருத்துவர்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.

Puducherry Lieutenant Governor
Puducherry Lieutenant Governor

By

Published : Apr 30, 2021, 9:15 PM IST

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் யாரும் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும், அரசாங்கம் மூலமாக மருந்து வழங்கப்படுகிறது.

தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தைப் பரிந்துரை செய்பவர்கள் மீது மருத்துவத் துறையின் மூலம் கண்காணிப்பும், நடவடிக்கைகளும் எடுக்க நேரிடும். கரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற மருத்துவமனைகள், கரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவமனையின் மூலமே ஏற்பாடு செய்து சிகிச்சையளிக்க வேண்டும். சிகிச்சை பெற வருபவர்களிடம் மருந்தை வாங்கிவரச் சொல்லி அலைக்கழிக்கக்கூடாது.

மேலும் அரசாங்கம் மூலமாக வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து முறையான நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா என்பதை மருத்துவத் தணிக்கைக்குழு மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details