புதுச்சேரி: காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, நீதி செயலர் கார்த்திகேயன், ஏடிஜிபி ஆனந்த மோகன், சிறை துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகர், கண்காணிப்பாளர்கள் விஷ்ணு குமார் மற்றும் செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.