புதுச்சேரி:புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர கோவிட் மேலாண்மைக் கூட்டத்தில், தலைமைச் செயலர் அஸ்வின் குமார், காவல்துறை தலைவர் ரன்வீர் சிங் கிருஷ்ணியா, துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை, " கரோனா மூன்றாவது அலையை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம். டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. ஆகவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வில்லாமல் ஈடுபடவேண்டும். தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நோய் எதிர்ப்புத்திறன் குறித்து அறிவியல் பூர்வமாக கருத்தை முன்வைக்கவேண்டும்.
மூன்றாவது அலை கடுமையாக இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடன் நாம் செயல்படவேண்டும், மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கருத்தரங்கங்கள், பயிற்சிகள் ஆகியவற்றுக்கு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்யவேண்டும்.