தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை - புதுச்சேரி காங்கிரஸ்

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை

By

Published : Feb 24, 2021, 10:08 AM IST

Updated : Feb 24, 2021, 10:38 AM IST

10:07 February 24

புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரைசெய்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைசெய்துள்ளார். இந்த நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி

புதுச்சேரியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 2 திமுக எம்எல்ஏக்கள், 1 சுயேச்சை எம்எல்ஏ உடன் ஆட்சி அமைத்து முதலமைச்சராகப் பதவியேற்றார் நாராயணசாமி.

காங்கிரஸ் எம்எல்ஏ தனவேல் கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கடந்த ஆகஸ்ட்டில் தகுதி நீக்கம்செய்யப்பட்டார், சமீபத்தில் அமைச்சர்கள் இருவர் உள்பட ஐந்து பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 15 லிருந்து ஒன்பதாக குறைந்தது. இதனால் காங்கிரஸ் அரசு அறுதிப்பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதையடுத்து சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் நாராயணசாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானம் தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து நாராயணசாமி ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர், நாராயணசாமியின் ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில்தான் இன்று புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு துணைநிலை ஆளுநர் பரிந்துரைசெய்துள்ளார்.

Last Updated : Feb 24, 2021, 10:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details