தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளி, கல்லூரிகள் உள்பட பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் - puducherry mask mandatory announcement

புதுச்சேரியில் பூங்காக்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள் உள்பட் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்
பள்ளி, கல்லூரிகள் உள்பட் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்

By

Published : Dec 28, 2022, 7:49 AM IST

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாடுகளில் BBV154 வகை கரோனா தொற்று பரவிவருவதால் நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. அந்த வகையில், புதுச்சேரியில் பூங்காக்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள், கடற்கரை சாலை, பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 01/01/2023 அன்று 01.00 AM மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து உணவகங்கள், விடுதிகள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் கரோனா தடுப்பு நடைமுறைகளை (SOP) பின்பற்றி வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்க படுகிறது. அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது மற்றும் 2 தவணை தடுப்பூசிகள் செலுத்தியுள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் (SOP) படி செயல்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் பொது அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து தனியார் கடைகள் மாற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் முன்பு பின்பற்றிய கோவிட்-19 தடுப்புக்குரிய நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Nasal Vaccine: நாசல் கரோனா தடுப்பு மருந்துக்கு ரூ. 800 விலை நிர்ணயம்

ABOUT THE AUTHOR

...view details