தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஆளுநர்கள் ஒற்றர்களாக செயல்படுகிறார்கள்'- நாராயண சாமி குற்றச்சாட்டு! - நாராயண சாமி செய்தியாளர்கள் சந்திப்பு

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்கள் ஒற்றர்களாக செயல்படுவதாக புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஒற்றர்களாக செயல்படும் ஆளுநர்கள்..! -  புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
ஒற்றர்களாக செயல்படும் ஆளுநர்கள்..! - புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Feb 5, 2022, 8:07 AM IST

புதுச்சேரி:புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி வீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் 6 குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள அவரது வீட்டில் பதிலளித்த முன்னாள் முதலமைச்சர், “எனது வீட்டின் முன்பு பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் 6 பேருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீவிரவாதிகள் நாட்டில் ஒழிக்கப்பட்ட வேண்டும், தமிழ்நாடு, புதுச்சேரியில் அமைதி நிலவ வேண்டும். தீவிரவாத கும்பலுக்கு இங்கே இடமில்லை என்பதைக் காட்டுகிறது. தீவிரவாதிகளுக்கு இந்தத் தீர்ப்பு மிகப்பெரிய படிப்பினை கொடுத்துள்ளது.

நீட் விலக்கு அளிக்க கோரி சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில் பல மாத காலம் காக்க வைத்திருந்தது தவறு. குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

நீட் சட்ட வரையறையை ஆளுநர் திருப்பி அனுப்பலாம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் மாநிலங்களை பொறுத்து வரை சட்டப்பேரவையில் சட்டத்தை நிறைவேற்றினால் அதற்கு விளக்கம் கேட்கலாம், சட்டத்தை திருப்பி அனுப்ப கூடாது.

அப்படி விளக்கம் கேட்டு அதனைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியது ஆளுநரின் கடமை. அதனைத் தமிழ்நாட்டு ஆளுநர் மீறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒற்றர்களாக செயல்படுவது தற்போது தெளிவாக் தெரிகிறது” என்றார்.

இதையும் படிங்க:திருநெல்வேலி காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழப்பு


ABOUT THE AUTHOR

...view details