தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

14 தொகுதிகளுக்கு காங். வேட்பாளர்கள் அறிவிப்பு: நாராயணசாமியின் பெயர் இல்லை! - TN assembly

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

Puducherry
புதுச்சேரி

By

Published : Mar 16, 2021, 10:20 PM IST

Updated : Mar 16, 2021, 10:34 PM IST

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக-விடுதலைச் சிறுத்தைகள்-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அதில், காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு தொகுதி மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில் நாராயணசாமியின் பெயர் முதற்கட்ட பட்டியலில் இல்லை. முதற்கட்ட பட்டியல் வருமாறு:

  1. காரைக்கால் வடக்கு - ஏ.வி. சுப்ரமணியன்
  2. மாஹே - ரமேஷ்
  3. திருநள்ளாறு - கமலக்கண்ணன்
  4. அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி
  5. ஏம்பலம் - கந்தசாமி
  6. நெடுங்காடு - மாரிமுத்து
  7. மணவெளி - அனந்தராமன்
  8. நெட்டப்பாக்கம் - விஜயவேணி
  9. முத்தியால்பேட்டை - செந்தில்குமரன்
  10. லாஸ்பேட்டை - வைத்தியநாதன்
  11. காமராஜ் நகர் - ஷாஜஹான்
  12. இந்திரா நகர் - எம். கண்ணன்
  13. கதிர்காமம் - செல்வநாதன்
  14. ஊசுடு - கார்த்திக்கேயன்

இதையும் படிங்க:புதுச்சேரி பேரவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Last Updated : Mar 16, 2021, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details