புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் கடந்த சில ஆண்டுகளாக நோயாளிகளுக்கு வெந்நீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் முன்னிலையில் வெந்நீர் இயந்திரம் வழங்கல்
புதுச்சேரி ஆசிரியர் சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் வெந்நீர் இயந்திரம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு வெந்நீர் இயந்திரம் வழங்கிய முதலமைச்சர்
இதனைக் கருத்தில்கொண்டு புதுச்சேரி அனைத்து ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் மருத்துவமனைகளுக்கு தூய சுடுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
இதற்கான நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையில் சுகாதாரத் துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.