தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வருமானம், சாதி சான்றிதழ்களை பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்' - நாராயணசாமி - Income and caste certificate

புதுச்சேரி: வருமானம், சாதி சான்றிதழ்களை இனி பள்ளிகள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

ஆய்வு செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
ஆய்வு செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Nov 3, 2020, 5:55 PM IST

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி, கல்லூரிகளில் சேருவதற்கு வருமானம், சாதி சான்றிதழுக்காக ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்கள் மிகவும் கூட்ட நெரிசலால் அலைகழிக்கப்படுகின்றனர். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆய்வு செய்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, முதலியார்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் எம்எல்ஏ ஆகியோர் இன்று (நவ. 3) தாலுக்கா அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, மாணவர்களின் நலன் கருதி அவரவர் பயிலும் பள்ளிகள் மூலமே வருமானம், சாதி சான்றிதழ்களை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க...உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் குளறுபடியா?

ABOUT THE AUTHOR

...view details