தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சுவாமிநாதனுக்கு கரோனா - PUDUCHERRY BJP LEADER SWAMINATHAN CAUGHT CORONA

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சுவாமிநாதனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுவாமிநாதன்
சுவாமிநாதன்

By

Published : Apr 9, 2021, 10:26 AM IST

தமிழ்நாடு, புதுச்சேரியில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் புதிய உச்சமாக நேற்று (ஏப்.08) ஒரே நாளில் 293 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநில பாஜக தலைவரும், நியமன எம்எல்ஏ மற்றும் லாசுபேட்டை தொகுதி பாஜக வேட்பாளருமான சாமிநாதனுக்கு நேற்று காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.

பின்னர், ஜிப்மர் மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், அவருடன் தொடர்பிலிருந்த கட்சி நிர்வாகிகள், அலுவலக ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதையும் படிங்க:ஐஐடி ரூர்க்கியில் 90 மாணவர்களுக்கு கரோனா... விடுதிகளுக்குச் சீல் வைப்பு

ABOUT THE AUTHOR

...view details