புதுச்சேரி மாநிலம் இலாசுபேட்டை தொகுதி 29ஆவது பாஜக கிளை நிர்வாகிகள் இணைந்து துலாபாரம் நிகழ்ச்சி நடத்தினர். அப்போது, மாநில தலைவர் சாமிநாதன், எடை அளவிற்கான நாணயங்களை தேர்தல் நிதியாக வழங்கினர்.
எடைக்கு எடை தேர்தல் நிதி வழங்கிய பாஜக நிர்வாகிகள்! - thulabharam function news
புதுச்சேரி: லாசுபேட்டை தொகுதி 29ஆவது பாஜக கிளை நிர்வாகிகள் இணைந்து மாநிலத் தலைவர் சாமிநாதன், எடை அளவிற்கு நாணயத்தை தேர்தல் நிதியாக வழங்கும் துலாபாரம் நிகழ்ச்சி நடந்தது.
எடைக்கு எடை தேர்தல் நிதி வழங்கிய பாஜக நிர்வாகிகள்!
பாஜக மாநிலத் தலைவர் சுவாமிநாதனின் 64 கிலோ எடைக்கு இணையான நாணயம் தேர்தல் நிதியாக வழங்கப்பட்டது. இலாசுபேட்டை உழவர் சந்தை அருகில் உள்ள விநாயகர் கோயிலில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு தொகுதி பொறுப்பாளர் கவுதம் குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்கள் லதா, ஜெயந்தி, விவசாய அணித் தலைவர் புகழேந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க...சென்னை டெஸ்ட்: ட்விட்டரில் பதிவிட்ட மோடி!