புதுச்சேரி: பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் ஏழைகளுக்கு இலவச துணிகள் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தின் கீழ் இலவச துணிக்கு பதில், பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் செயல்பட்டு வரும் ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மீண்டும் பணமாகவே வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினால் செயல்படுத்தப்பட்டு வரும் ஏழை மக்களுக்கான இலவச துணி வகைகள் வழங்கும் திட்டத்தின் கிழ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறையால் வழங்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கு பொங்கலை முன்னிட்டு ரூ.1,000 வழங்கப்படும்.