தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்த எம்எல்ஏ - pudhucherry news in tamil

புதுச்சேரி: கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கரோனா நோயாளிகளை சந்தித்து அவர்களின் தேவைகளை எம்எல்ஏ நேரு கேட்டறிந்தார்.

pudhucherry-mla-inspected-coivd-hospital-in-pudhucherry
கரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்த எம்எல்ஏ

By

Published : May 16, 2021, 11:08 PM IST

புதுச்சேரி மாநிலம், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இங்கு நாள்தோறும் 30க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சூழலில், உயிரிழந்த உடல்கள் அங்கேயே மூடி கட்டி வைக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இது அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக உயிரிழந்தவர்களின் உடல்களை அப்புறப்படுத்த ஆவண செய்ய வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை எம்எல்ஏ நேரு சென்று பார்த்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்துதர அவர் வலியுறுத்தினார். இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ’நாள்தோறும் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவது ஏன்...’ - ப சிதம்பரம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details