தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அப்துல் கலாம் நினைவு நாள்- முதலமைச்சர், ஆளுநர் மரியாதை! - pudhucherry news

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி முதலமைச்சரும், ஆளுநரும் கலாமின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்

pudhucherry-governor-and-cm-pay-homage-to-abdul-kalam
அப்துல் கலாம் நினைவு நாள்- முதலமைச்சர், ஆளுநர் மரியாதை!

By

Published : Jul 27, 2021, 2:07 PM IST

புதுச்சேரி:முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் இன்று இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுச்சேரியில் லாஸ்பேட்டையில் நடைபெற்ற அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமிசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கலாமின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

மரக்கன்றுகளை நட்டுவைத்த ஆளுநர்

இந்த நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செய்தனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மரக்கன்று நட்டனர்.

இதையும் படிங்க:நினைவு தினம்: கலாம் வாழ்வில் மூன்று திருக்குறள்

ABOUT THE AUTHOR

...view details