புதுச்சேரி:கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்குப் போதுமான நிதி உதவி திரட்ட 'உயிர்க்காற்று' என்ற திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் 'உயிர்க்காற்று திட்டம்' துவக்கம் - tamilisai
கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, நிதி உதவி திரட்டும் வகையில் 'உயிர்க்காற்று' என்ற திட்டத்தைத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா நோயாளிகளுக்கான கட்டமைப்பை உருவாக்க நிதி உதவி அளிக்கும் வகையில் 'உயிர்க்காற்று திட்டம்' நேற்று(மே.20) தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நிறுவனங்கள், அமைப்புகள் நிதி வழங்கலாம் என்று, துணை நிலை ஆளுநர் மாளிகைத் தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் இந்த திட்டத்தின் கீழ் 10 லட்ச ரூபாயினை வழங்கி உள்ளார். கனரா வங்கி 3 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது. இதேபோன்று அனைவரும் வழங்க துணை நிலை ஆளுநர் தமிழிசை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'நன்றி சகோதரரே...’ வாழ்த்திய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பினராயி விஜயன்