புதுச்சேரி: மருத்துவர் மீதான வன்முறையைத் தடுக்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு கதிர்காம மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் இன்று (ஜூன்.29) போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 24ஆம் தேதி இரவுப்பணியில் இருந்த பயிற்சி மருத்துவரை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கினர்.
மருத்துவர்களைத் தாக்கிய இருவர் மீது மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து தங்களுக்கு இரவு நேரப்பணியின்போது பாதுகாப்பு இல்லை என்றும்; பயிற்சி மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.