தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் யாத்திரையில் பிரியங்கா காந்தி - கணவர், மகனுடன் பங்கேற்பு - Rehan vadra

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில், கணவர் மற்றும் மகனுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி முதல்முறையாக கலந்துகொண்டார்.

ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா
ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா

By

Published : Nov 24, 2022, 11:50 AM IST

கந்தவா(மத்தியப் பிரதேசம்): காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தன் கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரெகன் வதேரா ஆகியோருடன் முதல் முறையாக கலந்துகொண்டார்.

கடந்த செப்டம்பர் மாதம், தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா வழியாக ராகுல் காந்தியின் பாதயாத்திரை நீண்ட நிலையில், தற்போது மத்தியப்பிரதேசத்தில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தின் கந்தவா மாவட்டத்தில் உள்ள போர்கான் பகுதியில் 2-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தியுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸ் ஆதரவாளர்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை 78 நாட்களைத் தாண்டிய நிலையில், முதல்முறையாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பாதயாத்திரையில் கலந்துகொண்டார். கணவர் ராபர்ட் வதேரா, மகன் ரெகன் வதேரா ஆகியோருடன் பிரியங்கா நடைபயணம் சென்றார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கணவர் மற்றும் மகனுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

மேலும் ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டும் யாத்திரையில் கலந்துகொண்டார். வரும் 4ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை நடைபெற உள்ள நிலையில், அடுத்த 10 நாட்களில் மத்தியப்பிரதேசத்தில் 7 மாவட்டங்களுக்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் நாட்டின் முதல் பொறியியல் அருங்காட்சியகம்

ABOUT THE AUTHOR

...view details